வேடசந்தூர் கடைவீதியில் அரசு உதவி பெறும் ஆரம்பபள்ளியான புர்கானியா பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளியின் நிர்வாகி பஷீர் அகமது தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி தலைவர் மேகலா, பேரூராட்சி செயல் அலுவலர் அந்தோணி யூஜின் மேரி, பேரூராட்சி துணைத் தலைவர் சாகுல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் திமுக நிர்வாகிகள், பேரூராட்சி அதிகாரிகள், பள்ளிக் கல்வித் துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.