நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் நாடார் திருமண மண்டபத்தில், தாயகம் திரும்பியோருக்கு நிலப்பத்திரம் திரும்ப ஒப்படைத்தல் மற்றும் விலையில்லா இணையவழி பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் ரூ.3.17 கோடி மதிப்பில் 73 நபர்களுக்கு நத்தம் இ பட்டா வழங்கி, 211 தாயகம் திரும்பியோருக்கு நிலப்பத்திரங்களை திரும்ப ஒப்படைத்தார்