தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சப் இன்ஸ்பெக்டர் முகிலரசன் மற்றும் போலீசார் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முத்தையாபுரம் வடக்கு தெருவில் உள்ள டீக்கடை முன்பு சாக்குப் பையுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர். அந்த பையில் மதுபான பாட்டில்கள் இருந்தது.