சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மூங்கில் ஊரணி பகுதியைச் சேர்ந்த ஆனந்தவல்லி, அவரது கணவர் சரவணன் உயிரிழந்த நிலையில், சரவணனின் தாயின் பெயரில் இருந்த சொத்தை சரவணனின் தாய் ஒருவருக்கு விற்றதாக கூறப்படுகிறது. தற்போது அந்த சொத்தில் சரவணனின் மனைவி ஆனந்தவல்லி மற்றும் அவரது குழந்தைகளுக்கு உரிமை உண்டு என வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த சொத்தை வாங்கிய நபர் வீட்டு வரி ரசீது மற்றும் மின்வாரிய ரசீதை தனது பெயரில் மாற்றியுள்ளார்.