தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 270-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் ஈடுபட்டு வருகின்றனர் இங்கு பிடிக்கப்படும் மீன்கள் உள்ளூர் தேவைக்கு போக அதிக அளவில் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் கேரளாவில் நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அங்கே கேரளவில் மீன்கள் வியாபாரம் நடைபெறாத காரணத்தினால் கேரள மீன் வியாபாரிகள் இங்கு வந்து மீன் எடுப்பது நின்றுள்ளது.