கடந்த 27ந் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதற்காக பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்து வந்தனர். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகரில் உள்ள தபசு மண்டப பகுதியில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.