திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தூத்துக்குடி மக்கள் வரிசையில் பாதுகாப்பு பணியில் இருந்த குலசேகரன்பட்டினம் காவல் நிலைய தலைமை காவலர் பிரபாகரனுக்கும் கோவில் உள்துறை கண்காணிப்பாளர் விவேக் என்பவருக்கும் வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது. இதனால் விவேக் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும் தலைமை காவலர் பிரபாகரன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.