வேடசந்தூர் பேரூர் அதிமுகவின் சார்பில் வருகின்ற 25ஆம் தேதி வேடசந்தூர் வருகை தரும் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை வரவேற்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூர் செயலாளர். பாபுசேட் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஜான்போஸ் முன்னிலை வகித்தார். வேடசந்தூர் பேரூர் 15 வார்டுகளைச் சேர்ந்த செயலாளர்கள் மற்றும் சார்பணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.