வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஒன்றியம் கோப்பம்பட்டியில் போலியான மணல் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வந்தது. இதனை அடுத்து காவேரி பாதுகாப்பு என்ற குழுவைச் சேர்ந்த விவசாயிகள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகைப்படம் மற்றும் ட்ரோன் வீடியோ காட்சிகளுடன் புகார் அளித்தனர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பந்தப்பட்ட ஆலையை சோதனை இடுமாறு உத்தரவிட்டார். இந்த சோதனையில் போலியான மணல் தயாரிக்கும் கம்பெனி செயல்பட்டு வருவதை கண்டறிந்த அதிகாரிகள் சீல் வைத்தனர்.