வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளம்பட்டி கிராமத்தை சேர்ந்த எட்டு பேர் ஒரு வேனில் அழகாபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றனர். நிகழ்ச்சியை முடித்துவிட்டு மீண்டும் தங்களது கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வேன் வேடசந்தூர் கோவிலூர் ரோட்டில் பண்ணை குளம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.