திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை சேர்ந்தவர் மணிகண்டன் வயது 32. இவர் தனது நண்பரை சந்திப்பதற்காக குஜிலியம்பாறைக்கு வந்து அங்குள்ள பெட்ரோல் பங்க் முன்பாக தனது ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நண்பருடன் பேசி உள்ளார். சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து பார்த்த பொழுது மோட்டார் சைக்கிள் காணாமல் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மணிகண்டன் குஜிலியம்பாறை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் இது குறித்து வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி மூலம் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற நபர் குறித்து விசாரணை.