வேடசந்தூர் மற்றும் குஜிலியம்பாறை இந்து முன்னணியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வேடசந்தூர் முனியப்பன் கோவிலில் நடைபெற்ற கூட்டத்தில்இந்து அன்னையர் முன்னணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சேலை வழங்கப்பட்டது. அதேபோல் குஜிலியம்பாறை பாலாஜி திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிலை ஊர்வலம் குறித்து பேசப்பட்டது.