வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஒன்றியம் பாகாநத்தத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. முகாமில் மகளிர் உரிமைத் தொகை, வருவாய்த்துறை, கூட்டுறவு உள்ளிட்ட 15 துறைகள் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டன. மருத்துவ துறை சார்பில் மருத்துவ முகாமும் நடந்தது. தாசில்தார் சிக்கந்தர் சுல்தான் தலைமை வகித்தார். ஊராட்சி உதவி இயக்குனர் சீனிவாசபெருமாள், ஒன்றிய பி.டி.ஓ., பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி வரவேற்றார். முகாமை வேடசந்தூர் எம்.எல்.ஏ.,காந்திராஜன் ஆய்வு செய்தார்.