சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கணக்கன்குடி காலனியில் வசித்து வரும் பஞ்சு (37) என்ற பெண் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாய் பேச முடியாதவரும், திருமணம் ஆகாதவருமான பஞ்சு, விவசாயக் கூலி வேலை செய்து வந்துள்ளார். சமீபத்தில் பஞ்சுவுக்கும் அவரின் தாயாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.