அரியலூரில் செட்டேரி கரை தென்புறம் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதையை மீட்கும் போராட்டம் நடத்த உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் பங்கேற்றார். அப்போது போராட்டத்திற்கு தயாரான நிலையில் போலீசார் மற்றும் வருவாய் துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.