தர்மபுரிமாவட்டம் காரிமங்கலம் அடுத்து முக்குளம் ஊராட்சி முரசுபட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. நான்கு ஊர்களுக்கு சொந்தமான இந்த கோவிலில் நாள்தோறும் சிறப்பு பூஜை பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று பூஜை முடித்துவிட்டு கோயில் பூசாரி கோயிலை பூட்டி சென்றுள்ளார். இன்று காலை அந்த வழியே சென்ற பொதுமக்கள் கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு சாமி கழுத்தில் இருந்த 3 தங்க நகை மற்றும் உண்டியல் பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.