தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே முல்லன்விளை கிராமத்தில் அடையாளம் தெரியாத சடலம் கிடப்பதாக சாயர்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் சென்று கிணற்றில் கிடந்த பெண் சடலத்தை மீட்டனர்.