வேடசந்தூர் அண்ணா நகர் பகுதியில் பொதுக் கழிப்பறை கட்டடத்தின் அருகே குடகனாற்றுக்குள் ஏராளமான குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த குப்பைகளில் திடீரென தீ பற்றி கொழுந்து விட்டு எறிய தொடங்கியது. அருகில் இருந்த வீட்டின் வைக்கப்பட்டிருந்த தென்னை மரம் கருகியது. மேலும் பாலத்தின் வழியாக செல்லும் டெலிபோன் கேபிள் மற்றும் கேபிள் டிவிக்கு செல்லும் வயர்கள் கருகத் தொடங்கியது. கழிப்பறை கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைப்புகள் தீயில் எறிந்து உருகியது. இதனை அடுத்து தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.