குஜிலியம்பாறை தாலுகா பாளையம் அருகே பாம்பாட்டி களம் என்ற இடத்தில் ஒரு டிப்பர் லாரி சாலை ஓரம் நின்று இருந்தது. அந்த லாரியின் டிரைவர் லாரியின் பின்பக்கமாக நின்று கொண்டிருந்தார். அப்பொழுது சற்று தூரத்தில் நின்று இருந்த டிரைவர் இல்லாத லாரி தானாக ஓடிவந்து நின்றிருந்த லாரியின் பின்பக்கமாக மோதியது. இதில் லாரியின் பின்னால் நின்று இருந்த ஈரோடு மாவட்டம் கோவிந்தபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவானந்தம் வயது 34 என்ற டிரைவர் முகம் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவம் குறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை.