ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காப்பிலியபட்டி ஊராட்சி, தங்கச்சியம்மாபட்டி ஊராட்சி பகுதிகளில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. தனியார் மருத்துவமனையின் சார்பில் நடைபெற்ற இந்த முகாமிற்கு வேடசந்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் எஸ் ஆர் கே பாலு தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் இடுப்பு, முதுகு மற்றும் கழுத்து வலி, தீராத மூட்டு வலி, எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்திற்கும் பரிசோதனை செய்யப்பட்டவர்கள் திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.