தூத்துக்குடி திரேஸ்புரம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி இவருக்கும் திரேஸ்புரம் மாதவன் நாயர் காலனி பகுதியைச் சேர்ந்த முத்துமாலை என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அடிக்கடி வரதட்சணை கேட்டு சின்னதம்பி மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார் இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு முத்து மாலை கர்ப்பம் தரித்துள்ளார்.