கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்படும் சுதந்திர போராட்ட வீரர் சிதம்பரனாரின் 154ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழக முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ உ சி முழு சிலைக்கு தமிழக வெற்றிக்கழக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.