சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அமைந்துள்ள திருவண்ணாமலை ஆதீனத்தின் 45-வது குரு மகாசன்னிதானம் திருப்பெருந்திரு தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாலயத்தில், நாளை மறுநாள் நடைபெற உள்ள திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு, இன்று புதிதாக கட்டி முடிக்கப்பட்ட திருவுருவச் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பங்கேற்று, திருவுருவச் சிலையை திறந்து வைத்தனர்.