1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட செப்டம்பர் 6 ஆம் நாள் காவலர் நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி இன்று காவலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய வளாக மைதானத்தில் காவல்துறை அணியினருக்கு இடையே நடைபெற்ற வாலிபால் போட்டி எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்.