சிவகங்கை மாவட்டம் காந்தி வீதியில் மாவட்ட மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்திற்கான புதிய கட்டிட பணித் துவக்க விழா நடைபெற்றது. இக்கட்டிடத்திற்காக ரூ.3 கோடி 25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் அடிக்கல் நாட்டினார். மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, கூட்டுறவு துறை அதிகாரிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.