வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே ஜிம் வைத்து நடத்தி வருபவர் கணேசன் வயது 28. இவருக்கும் வேடசந்தூரைச் சேர்ந்த முத்துப்பாண்டி, ஷேக்அப்துல்லா, சுல்தான் ஆகியோருக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கணேசனை தனியாக வரவழைத்த மூவரும் பீர்பாட்டிலால் தாக்கி, கத்தியை எடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பின்பு ஜிம்முக்குச் சென்று அங்கு கண்ணாடிகளை உடைத்ததாகவும் கணேசன் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் மூவர் மீதும் வழக்கு பதிந்து ஷேக்அப்துல்லாவை கைது செய்தார்.