திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் என்பவர் சசிகலா குறித்து தனியார் youtube சேனலில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சசிகலாவின் ஆதரவாளர்கள் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர். அதில் சசிகலா குறித்து அவதூறு பரப்பிய திமுக பேச்சாளர் மீதும், அந்த youtube சேனல் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி வலியுறுத்தப்பட்டிருந்தது.