திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஒன்றியம் படியூர் கிராமம் என்.பாறைப்பட்டியில் ஸ்ரீ வீரு விநாயகர் திருக்கோவில், ஸ்ரீ வீருபோசம்மாள் திருக்கோவில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மேல் மாத்தினிபட்டி ஓம் கந்தன் கும்மி குழுவினரின் கண் கவர் கும்மியாட்டம் நடைபெற்றது. இதனை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.