வேடசந்தூர் வசந்தா நகரில் குப்பைகளுக்கு இடையே கிடந்த பிளாஸ்டிக் டப்பாவிற்குள் இருந்ததை சாப்பிடுவதற்காக தலையை உள்ளே விட்ட தெரு நாய் தலையில் பிளாஸ்டிக் டப்பா மாட்டிக் கொண்டது. கடந்த நான்கு நாட்களாக தலையை வெளியே எடுக்க முடியாமல் தண்ணீர் உணவு எதுவும் சாப்பிட முடியாமல் நாய் தவித்து வந்தது. இதனை நான்கு நாட்களாக பார்த்த கல்லூரி மாணவி வேடசந்தூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்பு படையினர் நாயின் தலையில் மாட்டி இருந்த பிளாஸ்டிக் டப்பாவை அகற்றி நாயை காப்பாற்றினர்.