அரியலூர் மாவட்ட பாஜக சார்பில் ஜெயங்கொண்டம் காந்தி சிலை முன்பாக அக்கட்சி மாவட்ட தலைவர் பரமேஸ்வரி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பீகாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாரை பற்றி அவதூறு பேசிய காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.