புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் நல்லி வயல் உள்ளிட்ட கிராமத்தில் மாணவ மாணவிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து இல்லை எனக் கூறி உடனடியாக பேருந்து இயக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் உடன் கடுமையான வாக்குவாதம் ஈடுபட்டது. தொடர்ந்து காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை வலியுறுத்தி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.