திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணையில் 119 அடி அணியின் உயரத்தில் 114 அடியை எட்டியுள்ள நிலையில் எந்த நேரமும் அணை முழு கொள்ளளவை எட்டலாம் என்பதால் இன்று மாலை தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது தென்பனையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது