அரியலூர் நகரில் மேல தெருவில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்த பெரியநாயகி அம்மன் ஆலயம். இந்த ஆலயத்தின் 08ஆம் ஆண்டு குத்துவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு உலக அமைதிக்காகவும், விவசாயிகள் செழித்து வாழவும் விளக்கு பூஜை செய்தனர்.