தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவில் குலசேகரப்பட்டினத்தில் அமையப் பெற்ற அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா 23.09.2025 முதல் 03.10.2025 அன்று நடைபெறவுள்ளது. இத்திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் வருகை புரிவதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.