தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பழமை வாய்ந்த ஸ்ரீ செளடேஸ்வரி சடையப்பநாதர் திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவான் மற்றும் மூலவருக்கு தேன், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.