தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு நகர் பகுதியில் சாலையோரத்தில் அனுமதி இன்றி வரிசையாக உணவகங்கள் தள்ளு வண்டிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் அங்கே நின்று சாப்பிடுவதால் வாகனங்களை இருபுறமும் நிறுத்துகின்றனர். இது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது. விபத்து ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.