சிவகங்கை மாவட்டம் கீழக்குளம் அருகே உள்ள அழகுநாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயம் கீழக்குளத்திலிருந்து பில்லூர் வரை ஆறு கிலோமீட்டர் தூரம் என பந்தய எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு, நடைபெற்றது. இப்பந்தயத்தில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மொத்தம் 38 ஜோடி மாட்டுவண்டிகள் பங்கேற்றன.