சிவகங்கை வாரச்சந்தை பகுதியில் மெக்கானிக் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் வேலுச்சாமி மகன் சதீஷ்குமார் (51). இவர் நேற்று இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் அப்பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.