தூத்துக்குடியில் சோபுகாய் கோஜ்ரியோ கராத்தே இந்தியா சார்பில் 31வது எஸ் ஜி கே எஸ் தமிழ்நாடு பிரீமியர் லீக் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.