வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஒன்றியம் கொசவபட்டி ஊராட்சி சுந்தரபுரியில் குடிநீர் பிரச்சனை காரணமாக புதன்கிழமை காலை 8 மணி அளவில் பொதுமக்கள் காலி குடங்களுடன் திண்டுக்கல் எரியோடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வடமதுரை போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். ஒரு மணி நேரம் நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது.