தூத்துக்குடியில் ஆண்டுதோறும் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் ஆலய தசரா திருவிழா மற்றும் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ருத்ர தர்ம சேவா சார்பில் 15 ஆண்டுகளாக காளி வேடமனிந்த பக்தர்கள் ஊர்வலம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு காளி வேடம் அணிந்த பக்தர்களின் ஊர்வலம் தூத்துக்குடி இசக்கியம்மன் கோவிலில் இருந்து பூஜைகளுக்கு பின்பு துவங்கியது.