சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சகாய்தைனேஸ், நாகராஜன் தலைமையிலும், ஒருங்கிணைப்பாளர்கள் இராதாகிருஷ்ணன், ராம்குமார் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பலரும் உரையாற்றினர்.