சிவகங்கை அருகே உள்ள நாலுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் ரோகினி (வயது 41). இவர், வீரானி கண்மாய் பகுதியில் அனுமதி இன்றி கிராவல் மணல் அள்ளப்படுவதாக சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, டி.என் 63 பிகே 5719 என்ற எண் கொண்ட டாரஸ் வாகனத்தில், ஜேஜேபி இயந்திரத்தின் மூலம் கிராவல் மணல் அள்ளப்பட்டு கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.