தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று மாலை 6.30 மணி அளவில், மகாநந்தியம் பெருமானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மஞ்சள், திரவிய பொடி பால், பன்னீர் அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மகாதீப ஆராதனை கட்டப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.