சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கள்ளிக்குடி பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமியின் மகனிடம் சேகர் என்பவர் நகை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதை திருப்பித் தருமாறு அவர் கேட்டபோது, சேகர் முத்துலட்சுமியை கையால் தாக்கி, அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.