தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஓம் சரவணபவன் கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் வேல்முருகன் என்பவருக்கு நேற்று காலையில் திருமணம் முடிந்த நிலையில் இன்று காலையில் ஓம் சரவணபுரம் கிராமத்திலிருந்து 30-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு வேனில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். வேனை பசுவந்தனையை சேர்ந்த கைலாசம் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.