சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே துவாரையைச் சேர்ந்த விவசாயி சேதுராமன், தன்னுடைய மறைவிற்குப் பிறகு உடலை மருத்துவத்துறைக்கு பயன்படும் வகையில் தானமாக வழங்க பதிவு செய்துள்ளார். இதற்கான சான்றிதழை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வழங்கி, சேதுராமனின் மனிதநேய மனப்பான்மையை இன்று மாலை சுமார் 5 மணியளவில் பாராட்டினார்.