சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய்க்கு எதிராக அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் 2வது மாநில மாநாட்டில், விஜய் பேசுகையில் முதல் முறையாக அதிமுகவுக்கு நேரடியாக குற்றச்சாட்டு முன்வைத்தார். “அதிமுகவின் தலைமை சரியாக இல்லாததால், அதிமுகவினர் பிற கட்சிகளுக்கு மாறி வருகின்றனர்” என்று அவர் பேசியது