சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் முக்கிய வீதிகளில் கடந்தது.இந்நிலையில், இஸ்லாமியர் அதிகம் வாழும் திருப்புவனம் புதூர் பகுதிக்குள் விநாயகர் சிலையை அழைத்துச் செல்ல முயன்றபோது, காவல்துறையினர் பேரிக்கேடு அமைத்து தடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜகவினரும் இந்து முன்னணி உறுப்பினரும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.