தஞ்சாவூர் வடக்கு வாசல் சுண்ணாம்பு கால்வாய் தெருவில் லாரி டிரைவர் கார்த்திகேயன் என்பவர் வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு வெளியில் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. அதில் வைத்திருந்த ஏழரைப்பவன் நகை மற்றும் ரூபாய் 3000 ரொக்கம், ஒரு செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.